உள்ளூர் செய்திகள்

மாம்பழம் வாங்குவது எப்படி?

இது, மாம்பழ சீசன்; பெரும்பாலான கடைகளில் கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்களை விற்பர். அதை உண்பதன் மூலம் பல உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். அவற்றை தவிர்க்க, நல்ல மாம்பழங்களை வாங்க வேண்டும்.மாம்பழம் ஒரே சீராக பழுத்து, முகரும் போதே, வாசனை வர வேண்டும். அதுவே நல்ல மாம்பழம். மாறாக, ஒரு பக்கம் கறுத்து, மற்றொரு பக்கம் பழுத்து இருந்தால், அது கல் வைத்து, கனிய வைத்தது என அறிய வேண்டும்.நூறு கிராம் மாம்பழத்தில் நீர்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் மற்றும் கரோட்டின், 'ஏ' சத்து நிறைந்துள்ளது. மேலும், மாம்பழம் சாப்பிடுவதன் மூலம், சருமப் பொலிவு, நீடித்த இளமை, கண் பார்வை கூர்மை மற்றும் புண் வந்த வடுக்கள் மறைவதுடன், ஈரலில் ஏற்படும் ரத்தக்கசிவும் நிற்கும். சர்க்கரை வியாதி இருப்போரும், எடை குறைய நினைப்போரும் டாக்டரின் அறிவுரைப்படி மாம்பழம் சாப்பிடுவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !