இலியானாவின், பேக்லெஸ் போஸ்!
விலங்குகள் நலனுக்காக போராடும்,'பீடா' அமைப்பில் ஏராளமான நடிகைகள் தூதுவர்களாக இடம் பெற்று, விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர். இதில், லேட்டஸ்டாக இணைந்துள்ள பிரபலம், நடிகை இலியானா. 'விலங்குகளை கொன்று, அதன் தோல்களில் தயாரிக்கப்படும் பொருட்களை பயன்படுத்தாதீர்; விலங்குகளை சர்க்கஸ்களில் ஈடுபடுத்தாதீர்' என்ற வாசகங்களுடன், சமீபத்தில் விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கிய இலியானா, இதற்காக விதம் விதமாக போஸ் கொடுத்து கலக்கினார். அதிலும், தன் முதுகு அழகு முழுவதையும் காட்டியபடி, 'பிளாக் அன்ட் ஒயிட்'டில் வெளியாகியுள்ள இவரின் புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு உருக்கமான கூடுதல் தகவல்: அங்கோரா வகை முயல்களின் தோல்களை உரித்துத் தான், ஸ்வெட்டர், கம்பளி போன்ற உடைகள் தயாரிக்கப்படுகிறதாம். அடுத்தமுறை, ஸ்வெட்டர், கம்பளி அணியும்போது, அவற்றை கொஞ்சம் முகர்ந்து பாருங்கள். அங்கோரா முயல்களின் ரத்த வாடை அடிக்கலாம்!—ஜோல்னாபையன்.