உள்ளூர் செய்திகள்

பழமை மாறாத கிராமங்கள்!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சில கிராமங்களில் இன்னும் பழங்கால சூழ்நிலையை காணலாம். குறிப்பிட்ட ஜாதியினர், தங்கள் வழக்கப்படி சில தொழிலை செய்து வருகின்றனர். வழக்கத்துக்கு மாறாக அவர்கள் வேறுவிதமாக யோசிக்க கூட மாட்டார்கள்; வெளி உலக தொடர்பு அதிகம் இல்லாதவர்கள். இவர்கள் நிலை மாறுவதற்கு, அரசும் அக்கறை காட்டுவது இல்லை. விவசாய தொழிலில் ஈடுபடுபவர்கள், அறுவடை முடிந்ததும், தானியங்களை சேமித்து வைப்பதற்கு கூட, பழைய பாணியை தான் பின்பற்றுகின்றனர். படத்தில் காணப்படுவது, கிராமங்களில் நெல் சேமித்து வைக்கும் குடில்கள் தான்.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !