உள்ளூர் செய்திகள்

இந்தியாவின் முதல் லாரி!

இந்தியாவுக்கு முதன்முதலில் வந்த லாரி தான், இங்கு காணப்படுகிறது. 1905ல், தென் இந்தியன் டீ எஸ்டேட் நிறுவன மேலாளர், ரிச்சர்டுசன், கேரள மாநிலம், பீருமேடு பகுதிக்கு வந்தார். அன்று, சரக்கு போக்குவரத்திற்கு, மாட்டு வண்டிகளை தான் பயன்படுத்தி வந்தனர்.மாட்டு வண்டிக்கு பதிலாக, லாரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார், ரிச்சர்டுசன்.உடனே, இங்கிலாந்து அரசுடன் தொடர்பு கொண்டு, இரண்டு லாரிகள் அனுப்பும்படி தகவல் அனுப்பினார். பல மாதங்களுக்கு பிறகு, கப்பலில் இரண்டு லாரிகள் வந்தன.அந்த லாரிகளை முண்டக்கயம் - கோட்டயம் இடையே சரக்கு வினியோகம் செய்ய பயன்படுத்தி கொண்டார்; அந்த லாரிகளில் ஒன்று தான், இங்கு படத்தில் உள்ளது.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !