உள்ளூர் செய்திகள்

நீங்கள் விரும்பும் பெண் இவரா?

அமெரிக்காவைச் சேர்ந்த, ஆண்களுக்கான பிரத்யேக, இணையதள நிறுவனம், ஆண்டுதோறும், 'உலகிலேயே, உங்களால் அதிகம் விரும்பப்படும் பெண் யார்?' என்ற கேள்வியை கேட்டு, அதன் முடிவுகளை வெளியிட்டு வருகிறது.இந்தாண்டுக்கான கருத்துக் கணிப்பில், முதலிடத்தை தட்டிச் சென்றுள்ளவர், பிரபல ஹாலிவுட் நடிகை, ஜெனிபர் லாரன்ஸ். இவருக்கு, 22 வயது தான் ஆகிறது. மெழுகுச் சிலை போன்ற, இவரது தோற்றமும், அசத்தலான அழகும், பலரையும் கிறங்கடித்து விட்டது.'இவர் தான், எனக்கு பிடித்த பெண்' என, 24 லட்சம் பேர், ஏகமனதாக, ஜெனியை தேர்வு செய்துள்ளனர். மற்றொரு பிரபல ஹாலிவுட் நடிகை, மிலா குனிஸ், இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இணையதள நிர்வாகி, ஜேம்ஸ் பசில் கூறுகையில்,'ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல், எப்போதும் பிரஷ்ஷாக தோற்றமளிப்பதால் தான், ஜெனியை, பலருக்கும் பிடித்துள்ளது. அத்துடன், நடிக்க வந்து, நான்கு ஆண்டுகள் ஆகியும், இதுவரை எந்த சர்ச்சையிலும் அவர் சிக்கவில்லை என்பதும், மற்றொரு முக்கிய காரணம்...'என்கிறார். — ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !