விரைவில் வருகிறது ஜேம்ஸ் பாண்டு படம்!
ஆங்கில சினிமா என்றாலே, ஜேம்ஸ் பாண்டு படங்கள் தான் முதலில் நினைவுக்கு வரும். இதுவரை, 24 ஜேம்ஸ் பாண்டு படங்கள் வந்துள்ளன. இதில், ஐந்து படங்களில், ஜேம்ஸ் பாண்டாக நடித்தவர், டேனியல் க்ரைக் என்ற நடிகர். இவர், ஜேம்ஸ் பாண்டாக நடித்த, 25வது படத்தின் பெயர், நோ டைம் டூ டை. அடுத்த ஆண்டு, ஏப்ரல் மாதம், இப்படம் வெளிவர இருக்கிறது. கதையில், பிரபல விஞ்ஞானி ஒருவரை, தீவிரவாதிகள் கடத்தி வைத்திருப்பதாகவும், அவரை மீட்க, ஜேம்ஸ் பாண்டு முயற்சி செய்வதும் தான் கதை. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், புதிய ஜேம்ஸ் பாண்டை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.— ஜோல்னாபையன்.