உள்ளூர் செய்திகள்

கடமையை கந்தன் மதிக்கிறான்!

பிப்.,9 - தைப்பூசம்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பெற்றோர் ம்றறும் பிள்ளைகள் மீது, அதீதீ பாசம் வைத்திருப்பர் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.புனிதமான பூசம் நட்சத்திரத்தில், மதுரை மீனாட்சி - சொக்கநாதர் தெப்பத்தில் பவனி வருவர்; பழநியில், முருகப்பெருமானுக்கு காவடி எடுத்து வழிபடுவர்.திருநெல்வேலி மாவட்டம் திருப்புடை மருதூரில், பக்தர்கள் தாமிரபரணியில் புனித நீராடி, கருவூர் சித்தர் வழிபட்ட நாறும்பூ நாத சுவாமியை வணங்குவர்.கன்னியாகுமரி, அருகில் முருகன் குன்றம் என்ற ஊரில், முருகன் கோவில் ஒன்று இருந்தது. இவ்வூரைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவருக்கு கந்தவேலன் என்ற மகன் இருந்தான். முருகப்பெருமான் நிகழ்த்திய அற்புதங்களையும், அவரது அடியார்களின் வாழ்க்கை வரலாற்றையும் தன தந்தை கூறக் கேட்டதன் மூலம், முருக பக்தன் ஆனான்.படிப்பை முடித்த கையோடு, முருகன் கோவிலில் சேவை செய்ய ஆரம்பித்தான். முருகனுக்குரிய விழா நாட்களில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் கொடுத்து வந்தான்.அத்துடன், தினமும் முருகப் பெருமான் முன் நின்று கண்ணீர் வடித்து, 'முருகா... அருணகிரிக்கும், அவ்வைக்கும் காட்சி தந்தது போல், உன்னையே நினைத்து உருகும் எனக்கு காட்சி தரமாட்டாயா...' என்று வேண்டுவான்.அன்று தைப்பூசம்; அதிகாலையில், கோவிலுக்கு வந்த கந்தவேலன், பூஜை செய்து முடிக்க, அவனுக்கு ஆறுமுகம், பன்னிரு கரங்களுடனும் காட்சி தந்தார், முருகப் பெருமான். சிறிது நேரம் பக்தி பரவசத்தில் திளைத்தவனுக்கு அன்னதான மண்டபத்தில் உணவுக்காக காத்திருக்கும் பக்தர்கள், உணவிடும்படி சத்தமிட்டது காதில் விழுந்தது.உடனே, 'முருகா... என் வேண்டுதலுக்கு இரங்கி, எனக்கு நீ காட்சி தந்திருக்கிறாய். ஆனால் உன் பக்தர்கள் பசியுடன் காத்திருக்க, உன் பேரழகை ஆனந்தமாய் தரிசித்தபடி அமர்ந்திருப்பது முறையல்லவே! இதோ அவர்களுக்கு உணவு பரிமாறி வந்து விடுகிறேன்' எனச் சொல்லி பதிலுக்கு காத்திருக்காமல் விரைந்து சென்றான்.அன்னதானம் மற்றும் இதர வேலைகளையும் செய்து முடிந்த பின், சன்னிதிக்கு திரும்பினான்.என்ன ஆச்சரியம்! அங்கே, முருகப்பெருமான் தன் பக்தனுக்காக காத்திருந்தார்.என்ன ஆச்சரியம்! அங்கே முருகப்பெருமான் தன் பக்தனுக்காக காத்திருந்தார்.வியந்து போன கந்தவேலன், முருகனின் திருப்பாதங்களில் விழுந்து, தாமதத்திற்கு மன்னிப்பு வேண்டினான்.அப்போது, முருகபெருமான், 'கந்தவேலா... உனக்கு செய்யும் பூஜையை விட, பசித்தவருக்கு உணவளிப்பதே மிகச் சிறந்த தொண்டு. உன் கடமையுணர்வின் முன், நான் நிற்பது ஒன்றும் பெரியதல்ல. இதே போல் கடமையை எப்போதும் சரியாகச் செய்...' என்று கூறி ஆசிர்வதித்தார்.'கடமையைச் செய்யுமிடத்தில் கந்தன் வாசம் செய்கிறான்...' என்ற உண்மையை இந்த தைப்பூச நன்னாளில் உணர்வோம்!- தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !