உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - எல்லாருக்கும் கிடைக்கட்டும்!

வசதி படைத்தோர்விருந்துண்ணவும்வறுமையில் உழல்வோர்பட்டினி கிடக்கவுமானஇழிநிலை மாறட்டும்சத்தான சரிவிகித உணவுஎல்லாருக்கும் கிடைக்கட்டும்!வஞ்சகம் கொண்டோர்வெற்றி பெறவும்நேர்மையாய் உழைப்போர்தோல்வி அடையவுமானதாழ் நிலை மாறட்டும்நியாயமான நல்ல தீர்ப்புஎல்லாருக்கும் கிடைக்கட்டும்!குறுமதி உடையோர்பதவியில் அமரவும்நற்சிந்தனை நிறைந்தோர்வீட்டில் முடங்கவுமானபாழ்நிலை மாறட்டும் திறமைக்கான உரிய அங்கீகாரம்எல்லாருக்கும் கிடைக்கட்டும்!சுயநலம் நிரம்பியோர்மகிழ்ச்சியுறவும்பொது நலம் தேடுவோர்புலம்பித் திரியவுமானதுன்ப நிலை மாறட்டும்மனிதநேயம் தரும் இன்பம்எல்லாருக்கும் கிடைக்கட்டும்!ஜாதியை பூஜிப்போர்வாழ்த்தப்படவும்சமத்துவம் கற்பிப்போர்துாற்றப்படவும்மோச நிலை மாறட்டும்மேலான சகோதரத்துவ உணர்வுஎல்லாருக்கும் கிடைக்கட்டும்!பணத்தால் விலை பேசுவோர்வாய்ப்புகளை பெற்றிடவும்முறையாக காத்திருப்போர்புறக்கணிக்கப்படவுமானஅற்பநிலை மாறட்டும்மெய்யான சமூகநீதிஎல்லாருக்கும் கிடைக்கட்டும்!— வெ. பாலமுருகன், திருச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !