உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - எண்ணங்களும், வாழ்க்கை பயணமும்!

எண்ணங்கள் மாசு படாமல்இருக்கும் வரைவிமர்சனங்களை தாங்கும்தைரியம் தானாக வரும்!எண்ணங்கள் சலனம் ஆகாமல்இருக்கும் வரைதோல்விகளை சந்திக்கும்வலிமை தானாக வரும்!எண்ணங்கள் சந்தேகம் பரவாமல்இருக்கும் வரைவிரும்பாத நிகழ்வுகள்விலகி போய் விடும்!எண்ணங்கள் நேர்மை மாறாமல்இருக்கும் வரைபண்புமிகு காட்சிகள்கண்களில் வரிசை கட்டும்!எண்ணங்கள் பேராசைதுாண்டிலில் சிக்காத வரைவாழ்க்கையில் தாழ் நிலைநேரங்கள் தவிர்க்கப்படும்!எண்ணங்கள் சிந்திக்கும்சீர் மிகு செயல்கள்நல் வழி பாதையில்வாழ்க்கை தடம் பதிக்கும்!எண்ணங்கள் தரும்நேர்மறை சிந்தனைகள்எதிர்மறை களைந்துவான் புகழ் தந்து விடும்!எண்ணங்கள் அறம் மாறாமல்இருக்கும் வரைஅன்புமிகு நெஞ்சங்கள்இதயத்தில் இடம்பெறும்!எண்ணங்கள் சிதறாமல்பயணம் தொடரட்டும்...வாழ்க்கை தடங்கள்வெற்றி சிகரம் தொடட்டும்!— வி. சுவாமிநாதன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !