ஜப்பானிலும் கொலு!
நம் நாட்டில் கொலு வைப்பது போல், ஜப்பானிலும் அவர்கள் சம்பிரதாயப்படி கொலு வைத்து கொண்டாடுகின்றனர். நாம் படிக்கட்டுகளை கட்டுவது போல அவர்களும் படிக்கட்டுகள் வைத்து, அதில், சிவப்புத் துணியை விரித்து, அதில், ராஜாக்கள், ராணிகள், வேலைக்காரர்கள், இசைக்கருவி வாசிப்பவர்கள் என, தரம் வாரியாக பொம்மைகளை வைக்கின்றனர்.இந்த கொலு வைக்கும் விழா, இன்று, நேற்றல்ல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, ஜப்பானில் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் ஆற்றில் பொம்மைகளை மிதக்கவிட்டு கொண்டாடியவர்கள் காலப்போக்கில், வீட்டிலேயே கொலு வைக்க ஆரம்பித்தனர்.தங்கள் நலனுக்காகவும், குறைவில்லா சந்தோஷம் பெறவும், கொலு வைக்கின்றனர் ஜப்பானிய பெண்கள். நம்மைப்போன்றே, தனிப்பட்ட உணவு வகைகளை தயார் செய்து, வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு கொடுப்பதுடன், பொம்மைகளை அடுக்குதல், பெண்களுக்கு முக்கியத்துவம் தருதல், பெண்களை அழைத்து மரியாதை செய்தல் போன்றவற்றையும் ஜப்பானியர்களும் கடைபிடிக்கின்றனர்.— ஜோல்னாபையன்.