சமையல் அறை டிப்ஸ்!
* எண்ணெய் கறையை நீக்க, எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி, அதை உப்பில் வைத்து, அந்த துண்டுகளை வைத்து தேய்க்கலாம்* முட்டை விழுந்து உடைந்து விட்டால், அதன் மீது சிறிதளவு உப்பைத் துாவி, பிறகு துடைத்து எடுத்தால், சுத்தம் செய்வதும் எளிது; வாடையும் இருக்காது* 'மட்டன், சிக்கன்' போன்ற இறைச்சி வகைகளை, மிக்சியில் அரைத்து எடுத்ததும், ஜாரினுள் இரண்டு ரொட்டி துண்டுகளை போட்டு அரைத்தெடுத்தால், பிசுக்கும், வாடையும் இருக்காது.