உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல..

வடிவேலு புதிய கூட்டணி!உச்ச காமெடியனாக திகழ்ந்த வடிவேலு, சிறிது இடைவெளிக்கு பின், மீண்டும், கத்திச்சண்டை மற்றும் சிவலிங்கா படங்களில், காமெடியனாக நடித்து வருகிறார். மேலும், இளைஞர்களை, கவர வேண்டும் என்பதற்காக, அவர்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளை, தன் காமெடிகளில் சேர்த்து வருவதுடன், தன்னுடன், முன்பு நடித்து வந்த காமெடியன்களை தவிர்த்து, புதிய நபர்களுடன், கூட்டணி அமைத்து வருகிறார்.— சினிமா பொன்னையாசுனைனாவுக்கு சிபாரிசு செய்யும் காஜல் அகர்வால்!ஜீவா நடித்த, கவலை வேண்டாம் படத்தில், காஜல் அகர்வாலுடன் இணைந்து நடித்த போது, அவரது நெருக்கமான தோழியாகி விட்டார் சுனைனா. விளைவு, தற்போது, தனக்கு தெரிந்த இயக்குனர்களிடம், சுனைனாவுக்கும் வாய்ப்பு கொடுக்குமாறு, சிபாரிசு செய்து வருகிறார், காஜல் அகர்வால். ஒரு நடிகையே, இன்னொரு நடிகைக்கு சிபாரிசு செய்வதை, கோலிவுட்டில் ஆச்சரியமாக பார்க்கின்றனர். உனக்கு நான் அபயம்; எனக்கு நீ அபயம்!— எலீசாலண்டன் செல்கிறார் நயன்தாரா!அறம் மற்றும் இமைக்கா நொடிகள் படங்களில் நடித்து வரும் நயன்தாரா, தொடர்ந்து, கொலையுதிர்காலம் என்ற படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'கிரைம்' கதையில் உருவாகும் இப்படத்தை, பில்லா இரண்டாம் பாகத்தை இயக்கிய, சக்ரி டோல்டி இயக்குகிறார்; மேலும், இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும், லண்டனில் நடைபெற உள்ளது.— சி.பொ.,தங்கைக்காக, கதை கேட்கும் ஷாலினி!மணிரத்னத்தின், அஞ்சலி உட்பட, பல படங்களில், குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், பேபி ஷாம்லி. இவர் தற்போது, விக்ரம்பிரபு நடித்துள்ள, வீரசிவாஜி படத்தில், நாயகியாக நடித்துள்ளார். முதல் படத்திலேயே, 'ஹோம்லி'யான வேடத்தில் நடித்துள்ள ஷாம்லியை, தொடர்ந்து, அதே, 'இமேஜு'டன் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ள அவரது சகோதரி ஷாலினி அஜித், தங்கைக்காக, தீவிரமாக கதை கேட்டு வருகிறார்.— எலீசாமலையாள படத்தில், ப்ரியா ஆனந்த்!தமிழில், மார்க்கெட் மந்தமாகி விட்டதால், மலையாளத்தில், பிருத்விராஜ் நடிக்கும், எஸ்றா என்ற படத்தில், நடித்து வருகிறார், ப்ரியா ஆனந்த். திகில் கதையில் உருவாகி வரும் இப்படத்தில், பேய் வேடத்தில் நடிக்கும், இவரது கதாபாத்திரத்திற்கு தான், கதையில் முக்கியத்துவம் உள்ளது. அதனால், மலையாளத்தில், முதல் படமே, பெரிய வாய்ப்பாக கிடைத்திருப்பதாக கூறுகிறார்.— எலீசாவில்லன் வேடத்தில் கே.பாக்யராஜ்!தான் இயக்கிய, அஞ்சாதே படத்தில், பிரசன்னா மற்றும் பாண்டியராஜனை வில்லனாக்கியவர், மிஷ்கின். தற்போது, விஷாலை நாயகனாக வைத்து, இயக்கி வரும், துப்பறிவாளன் படத்தில், இயக்குனர், கே.பாக்யராஜை, வில்லனாக்கியிருக்கிறார். இதுவரை, யதார்த்தமாக, எளிமையாக நடித்து வந்த, கே.பாக்யராஜ் இந்த, 'நெகடீவ்' வேடத்துக்காக, தன் மேனரிஸத்தை முழுமையாக மாற்றி நடிக்கிறார்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!பீட்சா நடிகரின் மார்க்கெட் ஸ்டெடியாக இருப்பதால், அவருடன் நடித்தால், தங்களது மார்க்கெட்டும் ஸ்டெடியாகி விடும் என்று, சில வளர்ந்து வரும் நடிகைகள், அவரை துரத்துகின்றனர். இதனால், தன்னுடன், பல ஆண்டுகளாக, நிழல் போல் தொடர்ந்து வந்த ரம்மி நடிகையை, தற்போது கழட்டி விட்டுள்ள நடிகர், புதுவரவு நடிகைகளின் வேடந்தாங்களாக மாறியுள்ளார்.வம்பு நடிகருடன் நடித்துள்ள, சிவாஜி கேர்ள், சமீபத்தில், சென்னை வந்த போது, தன் ஆஸ்தான இயக்குனர்கள் சிலரை சந்தித்தார். அப்போது, தான் இன்னும் இளமையாக இருப்பதை வெளிப்படுத்தும் வகையில், கவர்ச்சிகரமான உடையணிந்து சென்று, அவர்களை, 'அட்டாக்' செய்த நடிகை, ஒரு பிரபல இயக்குனருடன், நட்சத்திர ஓட்டலில் சில தினங்கள், 'டேரா' போட்ட பின், மும்பை திரும்பியுள்ளார்.சினி துளிகள்!* வட சென்னை படத்தில் தனுஷுடன் நடித்து வரும், விஜயசேதுபதி, விக்ரம் வேதா படத்தில், மாதவனுடன் இணைந்து நடிக்கிறார்.* அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில், முதிர்ச்சியான சிம்புவுக்கு, ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ரேயா.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !