உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல..

பாரதிராஜாவின் பாராட்டு விழா!பாரதிராஜா இயக்கிய, 16 வயதினிலே படத்தில், ரஜினியும், கமலும் இணைந்து நடித்தனர். அதன் பிறகு, நாயகர்களாக வைத்து தனித்தனி படம் இயக்கிய, பாரதிராஜாவால், அவர்களை இணைத்து படம் இயக்க முடியவில்லை. இந்நிலையில், ரஜினி, கமலின் திரையுலக சாதனைகளை பாராட்டும் விதமாக, அவர்களுக்கு, மதுரையில் ஒரு விழா நடத்தப் போகிறார், பாரதிராஜா. இதற்காக, கோடம்பாக்கம் முழுவதையும் மதுரைக்கு அழைத்து செல்கிறார்.— சினிமா பொன்னையாஇயக்குனர்களை உஷார் படுத்தும், தமன்னா!'இயக்குனர் அல்லது தயாரிப்பாளர், யாராக இருந்தாலும், அவர்களின் வார்த்தையில் சுத்தம் இருக்க வேண்டும்...' என்கிறார், தமன்னா. அந்த வகையில், 'என்னிடம் பேசியது போலவே சம்பளத்தை கொடுத்து விட வேண்டும்; அதேபோல், முதலில் சொன்னது போலவே, என் கதாபாத்திரத்தை படத்தில் வைக்க வேண்டும். முதலில் ஒருமாதிரியாக சொல்லி, பின்னர் கதாபாத்திரத்தை வேறு மாதிரியாக மாற்றினால், ஏற்க மாட்டேன்; அந்த படங்களில் இருந்து உடனடியாக வெளியேறி விடுவேன்...' என்கிறார். இதனால், தமன்னா விஷயத்தில், இயக்குனர்கள் ரொம்ப உஷாராக இருக்கின்றனர். சொன்னால் போல கேட்டால், சுட்டார் போல கொடுப்பேன்! — எலீசாகவர்ச்சிக்கு முழுக்குப் போட்ட, நயன்தாரா!நயன்தாராவிடம் கதை சொல்லும், சில இளவட்ட இயக்குனர்கள், பாடல் காட்சிகளில், அவரை படுகவர்ச்சியாக நடிக்குமாறு கூறுகின்றனர். அப்படி நடிக்க மறுக்கும், நயன்தாரா, 'இதுவரை, 'பிகினி, டூ - பீஸ்' என, போதும் போதும் என்ற அளவுக்கு நடித்தாயிற்று. இனிமேல் அவ்வாறு நடிக்க, எந்த கவர்ச்சியும் என்னிடம் மிச்சமில்லை...' என்கிறார்.— எலீசாசர்வதேச விழாக்களில், ஷகீலா படம்!மறைந்த கவர்ச்சி நடிகை, சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படம், இந்தியில், த தர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் வெளியானது. அதையடுத்து, கவர்ச்சி நடிகை, ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு படமும், இந்தியில், ஷகீலா என்ற பெயரிலேயே உருவாகியுள்ளது. இந்த படத்தில், சிறப்பு தோற்றத்தில் ஷகீலாவும் நடித்திருக்கிறார். ஆகஸ்டில் திரைக்கு வரும் முன்னரே, சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட உள்ளது. தன் வாழ்க்கை படம், உலகமெங்கும் செல்லப்போகிற மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளார், ஷகீலா.பட்டவளுக்கு பலன் உண்டு; பதவியும் உண்டு!— எலீசா'சென்டிமென்ட்' ரஜினி!தர்பார் படம் வெளியானதும், ரஜினி அரசியலுக்கு வருவார், மாநாடு நடத்துவார் என்று, ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அவரோ, தர்பார் படம் முடிந்ததும், நடிப்பதற்கு நான்கு இயக்குனர்களிடம் கதை கேட்டவர், இப்போது, விஸ்வாசம் படத்தை இயக்கிய, சிவா இயக்கத்தில், அடுத்து நடிக்க, 'டிக்' அடித்துள்ளார். இந்த படம், அப்பா - மகள் சம்பந்தப்பட்ட, 'சென்டிமென்ட்' கதையில் உருவாக இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.— சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!* தளபதி நடிகர் முன்பெல்லாம், படத்தில் நடிக்க, கணிசமான சம்பளம் வாங்கி, ஒரு ஏரியா உரிமத்தையும் கேட்பார். ஆனால், சமீப காலமாக, படங்களை ஓட வைப்பது கடினமான காரியமாகி விட்டதால், அந்த, 'ரிஸ்க்'கை எடுப்பதில்லை, தளபதி. தன்னிடம், 'டீல்' பேசும்போதே, 'மொத்தத்தையும், பணமாக கொடுத்து விடுங்கள். இனிமேல், பண்டமாற்று முறையே வேண்டாம்...' என்று, நழுவிக் கொள்கிறார்.'டேய், விஜய்... முன்பெல்லாம், நீ கைமாத்தா எனக்கு பணம் கொடுத்தா, அதை திருப்பி கொடுக்கும்போது, அத்தொகைக்கு ஏதாவது பொருளா வாங்கி கொடுக்க சொல்வே... இப்ப என்னடான்னா, பணமாவே கொடுத்துட சொல்றியே... ஏண்டா?' என்றான், நண்பன்.'பொருளா வாங்குனா, வீட்டுல தேவையில்லாம அடைசல் சேர்ந்துடுது... பணமா கொடுத்தா, வங்கியில சேமிக்கலாம்; தேவைப் படும்போது பயன்படுத்திக்கலாம். அதற்காக தான்...' என்றான், விஜய்.சினி துளிகள்!* பிகில் படத்தில், மைக்கேல், பிகில் என, இரண்டு வேடங்களில் நடிக்கிறார், விஜய்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !