மச்சான் மாட்டிக்கிட்டாரு !
ஹாலிவுட் படங்களை பார்ப்போருக்கு, ஜார்ஜ் குளுனியை தெரியாமல் இருக்க முடியாது. இவருக்கு, 52 வயதாக இருந்தாலும், ஹாலிவுட் ரசிகைகளின் கனவு காதலன் இவர் தான். 'ஹாலிவுட்டின் எவர்கிரீன் பேச்சிலர்' என, செல்லமாக அழைக்கப்படும் இவரை, இதுவரை எத்தனையோ நடிகைகள், காதலித்தும், இவர், அவர்களை கண்டு கொள்ளவே இல்லை. இத்தனை நாட்களாக தப்பி வந்த அவர், தற்போது, பிரிட்டனை சேர்ந்த அமல் அமலதீன் என்ற பெண்ணின் காதல் பார்வையில், வசமாக சிக்கியுள்ளார். இந்த பெண், ஒரு சமூக ஆர்வலர். இவரை, தன் வீட்டுக்கு அழைத்து, தன் கையாலாயே சமைத்த உணவை பரிமாறி, காதலை தெரிவித்துள்ளார், க்ளூனி. இதனால், பரவசமடைந்த அமலதீன், காதலுக்கு பச்சை கொடி காட்ட, செப்டம்பரில் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளது.— ஜோல்னாபையன்.