மருத்துவ டிப்ஸ்!
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இரண்டு அல்லது மூன்று டம்ளர் தண்ணீர் குடித்தால், அது உடம்பிலுள்ள நச்சுத் தன்மையை வெளியேற்ற உதவும். குடல், சிறுநீரகங்களை சுத்தப்படுத்தும். நல்ல பசியெடுக்கவும் உதவும்* உடம்பு வலிக்கும்போது, சூடான வெந்நீரில் சிறிது நீலகிரி தைலத்தை கலந்து குளிக்கவும். உடல் வலி குறையும்; புத்துணர்ச்சி பெறுவீர்கள்* எறும்பு அல்லது வேறு சில வகை பூச்சிகள் கடித்தால் ஏற்படும் வலியையும், வீக்கத்தையும் போக்க, கடிபட்ட இடத்தில் சமையல் சோடாவை தண்ணீரில் குழைத்து தடவவும்.