உள்ளூர் செய்திகள்

இதல்லவோ நட்பு!

பாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் சீரியல் படங்கள், ஹாலிவுட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பிரபலம். அதிரடி ஆக் ஷன் காட்சிகள் நிறைந்த இப்படங்களில், வின் டீசல் மற்றும் பால் வாக்கர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இதன் மூலம், இவர்கள் நெருக்கமான நண்பர்களாகி விட்டனர். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த கார் விபத்தில், பால் வாக்கர் இறந்து விட்டார். அவரது இழப்பை தாங்க முடியாமல், நீண்ட நாட்களாக சோகத்தில் இருந்தார் வின் டீசல்.சமீபத்தில், வின் டீசலின் மனைவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு, தன் நண்பன் பால் வாக்கர் நினைவாக, பாலின் என பெயர் வைத்துள்ளார் வின் டீசல்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !