உள்ளூர் செய்திகள்

விழாவுக்கு மட்டுமே ஒரிஜினல் கிரீடம்!

சமீபத்தில் நடந்த உலக அழகி போட்டியில், 'மிஸ் வேல்டு' பட்டம் சூடி, ௧௭ ஆண்டுக்கு பின், இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மானுஷி சில்லர். 'மிஸ் வேல்டு' பட்டம் பெறுபவர் தலையில் சூடும் கிரீடம், வைரம், வைடூரியம் போன்றவையால் அலங்கரிக்கப்பட்டது. இதன் மதிப்பு, நான்கரை கோடி ரூபாய். இக்கிரீடத்தை விழாவின்போது தலையில் வைத்தாலும், பின், அதை வாங்கி, வங்கி லாக்கரில் வைத்து விடுவர். வெற்றி பெறுபவர், வீட்டுக்கு போகும் போது, டூப்ளிகேட் கிரீடம் தான் எடுத்துச் செல்வர்.—ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !