உள்ளூர் செய்திகள்

திண்ணை!

நான், 'பொம்மலாட்டம்' என்ற திரைப்படத்தை, 1969ல், இயக்கி, தயாரித்துக் கொண்டிருந்தேன். இப்படத்தில் ஜெயலலிதா, ஜெய்சங்கர் நடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் ஆடிப்பாடி நடிக்கும், டூயட் காட்சி ஒன்றைப் படமாக்கினேன். அதை, ஜெயலலிதாவுக்கு போட்டுக் காட்டினேன். முதலில், காட்சியைக் கண்டு மகிழ்ந்த அவர், இரண்டு நாட்களுக்குப் பிறகு என்னை போனில் அழைத்தார்.'அந்த காட்சியை மறுபடியும், 'ரீ-டேக்' செய்து விடுங்கள்...' என்றார். 'ஏன்?' என்று கேட்டேன். 'என் உடை எனக்குப் பிடிக்கவில்லை. வேறு உடையில் நான் அதில் நடிக்க விரும்புகிறேன்...' என்றார். எனக்கு அதனால் கூடுதல் செலவு ஆகும். இருந்தும் நான், 'சரி' என்றேன். ஜெய்சங்கரிடமும் கால்ஷீட் வாங்கி விட்டேன்.'அந்த காட்சியின் டான்ஸ் மாஸ்டர் தங்கப்பன், ஊரில் இல்லை. ஜெயலலிதாவிடம் அதைக் கூறினேன். அவர், 'பரவாயில்லை... தங்கப்பன் மாஸ்டரோடு ஒரு இளைஞர் உதவியாளராகப் பணியாற்றினாரே... அவரை வைத்து படமாக் கலாம்...' என்று கூறினார். அந்த உதவி டான்ஸ் மாஸ்டர் வேறு யாருமல்ல. நடிகர் கமல்ஹாசன் தான்.'அவர், அப்போது டான்ஸ் அசிஸ்டென்டாக தங்கப்பன் மாஸ்டரிடம் பணியாற்றிக் கொண்டி ருந்தார். அவர் வந்து ஆடிக் காட்ட, ஜெயலலிதா, ஜெய்சங்கரை நடிக்க வைத்து, அந்த காட்சியை மீண்டும் படமாக்கினேன். ஜெயலலிதா திருப்தியடைந்தார்!— இயக்குனர் முக்தா சீனிவாசன், ஒரு கட்டுரையில்...ஈ.வெ.ரா.,வைத் தலைவராக்கிய ராஜாஜி, 'என்னை முழுக்க முழுக்க சமுதாயத் தொண்டனாக்கி, காங்கிரசில் ஈடுபடுத்தி, தலைவர் நாயக்கர் என்று தாமும் அழைத்து, பிறரையும் அழைக்கச் செய்த பெருமை அவரையே சாரும். நாங்கள் நாலைந்து ஆண்டுகள் இரண்டறக் கலந்து நண்பர்களாக இருந்தோம்...' என, ராஜாஜி மறைந்த போது, 'விடுதலை' தலையங்கத்தில் ஈ.வெ.ரா., குறிப்பிட்டிருந்தார். தலைவர் பதவிக்கு ஈ.வெ.ரா.,வை அமர்த்திய சம்பவம், 1923ல் நடந்தது.தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு, ஈ.வெ.ரா., பெயரை ராஜாஜி முன் மொழிந்தார். ராஜாஜியால் முன்மொழியப்பட்ட காரணத்தால், எதிர்தரப்பு வேட்பாளர் வெற்றி பெற முடியவில்லை. ஆகவே, தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என, ஒரு சிலர் குற்றம் சாட்டினார்.முறையாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அந்த உறுப்பினர்களைக் கொண்ட முதல் கூட்டம், டிச., 2, 1923ல் திருச்சியில் நடந்தது. கூட்டத் தில், எஸ்.சீனிவாச ஐயங்கார், சிங்காரவேலு செட்டியார், ஈ.வெ.ரா., சி.ராஜகோபாலாச்சாரியார், டி.எஸ்.எஸ்.ராஜன், திரு.வி.க., சத்திய மூர்த்தி, வ.வே.சு.ஐயர் போன்ற முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக, தலைவர் பதவிக்கு, சீனிவாச ஐயங்கார், திரு.வி.க., டாக்டர் வரதராஜலு நாயுடு ஆகியவர்களின் பெயர்கள் முன்மொழியப் பட்டு, இறுதியில் ஈ.வெ.ரா., நாயக்கருக்கும், ஜனாப் யாகூப் ஹசன் சேட்டுக்கும் போட்டி யிருந்தது.முதலில், ஈ.வெ.ரா., நாயக் கரின் பெயர் ஓட்டுக்கு விடப்பட்டது. அவருடைய பெயரைச் சொல்லும் போது, சி.ராஜகோபாலாச் சாரியார் முன்மொழிந்த ஸ்ரீமான் ராமசாமி நாயக்கருக்கு ஓட்டு போடுபவர்கள் கையைத் தூக்குங்கள் என, உப தலைவர் டி.எஸ்.எஸ்.ராஜன் சொன் னார். அவருக்கு நூற்றுக்கும் மேற் பட்ட ஓட்டுக்கள் கிடைத்தன. யாகூப் ஹசன் சேட்டுக்கு, 20 ஓட்டுகள் கிடைத்தன.இப்படி நடந்தது, ஸ்ரீமான் ராஜகோபாலாச் சாரியாரின் சூழ்ச்சி என, முஸ்லிம் உறுப்பினர்கள் ஆட்சேபித்தனர். சிலர், பகிரங்கமாக அறிக்கை விட்டனர்.அக்காலத்தில் நிலவிய காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி சண்டையை இச்செய்திகள் வெளிச்சம் போட்டுக் காட்டினாலும், ராஜாஜிக்கும் ஈ.வெ.ரா.,வுக்கும் இடையே இருந்த பிணைப்பை இச்செய்திகள் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம்.ஈ.வெ.ரா.,வின் துணைவியார் நாகம் மையார் தான், தமிழகத்தில் இருந்து, அகில இந்திய காங்கிரசுக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் பெண்மணி.— டிச., 25, 1993ல், வே.ஆணைமுத்து வெளியிட்ட ஈ.வெ.ரா.,வின், 115வது பிறந்ததாள் மலரில், ராஜாஜி, ஈ.வெ.ரா., டி.எஸ்.எஸ்.ராஜன் ஆகிய மூவரும் இருக்கும் அரிய படமும், இந்த சுவாரசியமான தகவலும் வெளியிடப் பட்டுள்ளது.***-நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !