உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

நான், நானாக இல்லை!* நாளைக்கெனமிச்சம் மீதி வைக்காமல்இன்றே செலவு செய்துதீர்க்கிறேன்...சேமிப்பில் இருக்கும் செய்திகளைஉன்னிடம் பேசும் போதுஒரு ஊதாரியைப் போல!* நமக்கு நடுவே ஏற்படும்சிறு சிறு பிரிவு இடைவெளிகளைபார்க்கிறேன்...மலைப்பிரதேச பயணங்களின் போதுதென்படும்பள்ளத்தாக்குகளைப் போல!* காற்றில் அசைந்து வந்துஎன் மீது உன் முந்தானைஉரசும் போதெல்லாம்லயிக்கிறேன்கோடைமழையின் தீண்டலின் போதுசிலேகிக்கும் ஒரு செடியைப் போல!* உன் பார்வைத் தீண்டல்கள்நிகழும் போதெல்லாம்குதூகலித்து குதிக்கிறேன்தென்றல் மோதும் போதுஅசையும் கொடி மலரைப் போல!* உன்னைப் பற்றியாரிடமேனும் பேசும் போதெல்லாம்சலிக்காமல் பேசிபினாத்துகிறேன்ஒரு பைத்தியக்காரனைப் போல!* உன்னிடமிருந்துவிடைபெறும் போதெல்லாம்மனசு உடைகிறேன்...கோடை விடுமுறை முடிந்துமுதல்நாள் பள்ளிக்குச் செல்லும்சிறுவனைப் போல!— வீ. விஷ்ணு குமார், கிருஷ்ணகிரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !