கவிதைச்சோலை!
சொல்லாமல் போகிறவர்கள்!* எந்த வைபவங்களுக்கும்பூக்களைதங்கள் பெயர் சொல்லிஅனுப்பி வைப்பதில்லைசெடிகளும், கொடிகளும்!* தன்னைபுண்ணியத் தீர்த்தமென்றுஅழைக்காதவரை நதி சுட்டெரிப்பதுமில்லை;அவரது நிலங்களைவறண்டு போக விடுவதுமில்லை!* யார் பாராட்ட வேண்டுமென்றுஎல்லாருக்காகவும்சுழன்று கொண்டிருக்கிறதுபூமி?* கல்வெட்டில் தன் பெயரைஎழுதி வைத்தவரை விட,எழுதாமல் விட்டவர்கள்எப்போதும்நினைவில் நிற்கின்றனர்எல்லா இதயங்களுக்குள்ளும்'யார் அவர்கள்?' என்று!* வெட்கத்திற்குஉரியதாய் தோன்றுகிறதுபுகழ் என்று நினைத்துவிளம்பரப்படுவது!* தியாகி என்ற அடைமொழியும்சுமையாகவே தெரிகிறதுபொதுநலத்தைவிரும்புகிறவருக்கு!* சாதனைகளைச் செய்து விட்டுதான் யாரென்றுசொல்லாமல் போகிறவரோடுஒப்பிடுகையில்விருதுகள் பெற்றவரும்வீழ்ந்து விடுகின்றனர்!* வீணையாவதில்பெருமை இருந்தாலும்விறகாவதன்மகத்துவம் அதிகமென்றேதோன்றுகிறதுமரங்களுக்கு!— கீர்த்தி, கொளத்தூர்.