உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

அடையாளம்!* வாழவே பிடிக்கவில்லைஇவ்வுலகில்...தற்கொலை எண்ணம்அவ்வப்போதுதலையெடுக்கிறது...* வழிப்பறி திருட்டுபாலியல் பலாத்காரம்நயவஞ்சகம் துரோகம்...* ஆள் கடத்தல்லஞ்ச ஊழல்சொத்துக் குவிப்பு...* தீவிரவாதம் வன்முறைஅநாகரிக அரசியல்போலியான மதவாதிகள்நடிப்பை நம்பும் இளைஞர்கள்...* அராஜகம் ரவுடித்தனம்மாற்ற முடியாதகுடி மக்கள்...கண்மூடித்தனமானகட்சித் தொண்டர்கள்...* கட்டுப்படுத்த முடியாதவாகன விபத்துக்கள்சீரழியும் சுற்றுப்புறசுகாதாரம்...* சோம்பேறித்தனத்தைவளர்க்கும் இலவசங்கள்...பலனில்லாமல் பாழாகும்மக்கள் பணம்...* தனி மனிதனால் எதையும்மாற்ற முடியாது எனினும்வாழ்ந்து தொலைக்கவேண்டியிருக்கிறது... 'இப்படியும் ஒருநல்லவன்...?' என அடையாளம் காட்ட!—சொல்கேளான் ஏ.வி.கிரி,தாம்பரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !