உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

உன் விழிகள் மட்டும் விதிவிலக்கு...* குருடனாகவாவதுபிறந்திருக்கலாம்...உன் பார்வையாவது என்னைபடுத்தாதிருக்குமே!* புல்லாங்குழலாகவாவதுஜனித்திருக்கலாம்...உன் மூச்சுக் காற்றுப் பட்டாவது முன்னுக்கு வந்திருப்பேனே!* ஒன்றை புரிந்து கொள்...உன் காதலால்நான் எழவும் முடியும்என் இழவிலும் முடியும்!* ஆயுதம் என்பதுகருணையற்றது தானே...உன் விழிகள் மட்டும்எப்படி விதிவிலக்கு?* மதுவிலக்கு என்பதுகள்ளுக்கு உண்டு...ஏனோ...உன் கண்ணுக்கு இல்லை!* உன் விழியால் மட்டும்எப்படியடி ஒருசேர வீச முடிகிறது...அன்பையும், அணுகுண்டையும்!* மதக்கருத்துக்கு வளையாத நானும்உன் மனக்கருத்துக்கு வளைய ஆசை...சம்மதம் சொல்வாயா?* விழுவது என்பதைதோல்வி என்கிறாய்...உன் காதலில் மட்டும்விழுந்தால் தானடிஎனக்கு வெற்றி!* காதல் —பூக்கவும் வைக்கும்உதிரவும் வைக்குமென்பதைஉன் நிராகரிப்பே எனக்குகற்றுக் கொடுக்கிறது!* மன்னருக்கு அடிபணியாதவனும்உன்னிடம் மண்டியிடும் கதைகாதல்!* உளியின் அடிசிலைக்கு சந்தோஷம்...உன் விழியின் அடிஎனக்கு சந்தோஷம்!* உன் கருப்பு வெள்ளைவிழிகளைக் கண்டதிலிருந்துஎனக்குள் வானவில் பிரவாகம்!* அடியே...உன் பார்வையால்நல்லதொரு முடிவைச் சொல்...இல்லையெனில்...என் உயிர் போகும் வரைஅந்த பார்வையாலே கொல்!— இளையசாகுல், முத்துப்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !