உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

இது வைகையின் கோபம்!* சிவனுக்காக தலைகுனிந்துவைகையாய் மாறினேன்...தவித்தோர் வாய்க்குதாகம் தீர்த்தேன் - எனைதவிக்க விடுகிறீர்களே!* வற்றாத செல்வமாய்வாரி வாரி வழங்குகிறேன்ஆனாலும் என் அருமைதெ(பு)ரியவில்லையே!* கண்டதைத் தின்றுகாலைக் கடனை கழித்துகடமையாய் என்னோடுகலந்து விடுகிறீர்கள்சட்டென்று பூசிக் கொள்ளசந்தனமா, ஜவ்வாதா?* அழுகியதை கொட்டும்போதுஅருவருப்பில் மனம் கனக்கிறது!* கரையெல்லாம் என்மீதுஆக்கிரமிப்பு செய்கிறீர்கள்ஆழமாய் என்னை வெட்டிஅங்கஹீனப்படுத்துவதோடுஆங்காங்கே சிறுவர்களின்அகால இறப்புக்கும் ஆளாக்குகிறீர்கள்!* பொறுத்து பார்த்து விட்டேன்கழிவுகளின் முடைநாற்றமும்கயவர்களின் ஆக்கிரமிப்பும்கட்டுக்கடங்கா கோபம் தருகிறது!* ஓலமிட்டு ஓலமிட்டுஓய்ந்து விடுவேன் ஒருநாள்...கவலை எனக்கில்லைகண்டிப்பாக உங்களுக்குத் தான்!* ஒரு சொட்டு தண்ணீருக்காகஉங்கள் சந்ததி ஏங்கும்...வருந்தி அழைத்தாலும்வர மாட்டேன்!இன்னொரு வைகைஇனிமேல் இல்லை!— எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !