கவிதைச்சோலை!
கோடையும் நீயே, வாடையும் நீயே!* உன் பார்வையால் மட்டும்எப்படி முடிகிறது...கோடையிலும்,வாடையிலும் குளிர வைக்க?* எப்படியோ...என் இரவும், பகலும்நீயாகவே இருக்கிறாய்!* நீ என்ன...சூரியனுக்கு பிறந்தவளா?அதனால் தானோஉன் நிராகரிப்பு என்னைஎரித்து சாம்பலாக்குகிறது!* இதயமென்பது மென்மையானதுஅதன்மீது பூக்களை வீசு...பூகம்பத்தை வீசாதே!* உன் புன்னகை எப்போதும்குளிர்ச்சி தரும் விஷயம்...உன் அணுகுமுறைதான்நெருப்பின் எதிரொளி!* உன் பார்வை என்னைபூக்க வைக்கிறது...உன் மவுனம் தான்என்னை உதிர வைக்கிறது!* உன் பாதச்சுவட்டில்நீர் சுரக்கிறது...உன் நெஞ்சுக்கூடுதான்கல் சுமக்கிறது!* இரவு நேரத்தில்கனவில் சிரிக்கிறாய்...பகல் நேரத்தில் தான்படுத்தித் தொலைக்கிறாய்!* ஒரே சமயத்தில்என்னையும் பார்க்கிறாய்...மண்ணையும் பார்க்கிறாய்...என்னை புதைக்கவா...வெட்கம் புதைக்கவா...* உன் பார்வை எனக்குலாபத்தையும் தருகிறது,நஷ்டத்தையும் தருகிறது!* உன் பார்வை எனக்குகோடையையும் தருகிறது,வாடையையும் தருகிறது!* அடீ...உன்னையே என்கல்வெட்டாய் நினைத்திருக்கிறேன்!* காலம் காலமாய்நான் ஆராயப்பட வேண்டும்தயவு செய்து என்னை காதலி!— அதிரை.இளையசாகுல், திருவாரூர்.