உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

சுதந்திர சிறகுகள்* நம் சிறகுகள்பிறர் பறப்பதற்கா?நம் சுதந்திரம்பிறர் ஆள்வதற்கா?* இளைஞர்களே...சிந்தனைச் சிறகுகள்காதல் சிறையிலேபூட்டிடவோ!* சிறுவர்களே...வசந்தச் சிறகுகள்திரை அரங்கிலேதொலைத்திடவோ!* தாய்மார்களே...கூர்மதி சிறகுகள்சின்னத் திரைச் சீரியலிலேசிதைத்திடவோ!* வாக்காளர்களே...வாக்குச் சிறகுகள்அரசியல்வாதியிடம்வாடகைக்கு விட்டிடவோ!* பாட்டாளி தோழரே...உழைப்பு சிறகுகள்பண முதலையிடம்அடகு வைத்திடவோ!* பட்டதாரிகளே...திறமைச் சிறகுகள்பன்னாட்டு திமிங்கலத்திடம்பறிகொடுத்திடவோ!* இன்னும் இன்னும்உதிர்ந்திட்டநம் சிறகுகளோஏராளம் ஏராளம்!* இனியாவது...பெற்ற சுதந்திரத்திற்கான இனிப்போடுபெற வேண்டிய சுதந்திரத்திற்கானகண்ணீரையும் பிரசவிப்போம்!* உயரட்டும்தேசியக் கொடியோடுநமது சிறகுகளும்சுதந்திரமாய்!— பெ.பாண்டு, சிவகாசி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !