கவிதைச்சோலை
காக்கிப் பூக்கள்....!* நாங்கள்காக்கிப் பூக்கள்...வியர்வையில்வளரும்வாடா மலர்கள்!* சூரியனில் வியர்த்தும்நிலவினில் குளித்தும்எப்போதும் மின்னும்நட்சத்திரங்கள் நாங்கள்!* தீமைகளை அழித்துநன்மைகளை காத்துபுது உலகம் படைக்கும்முத்தொழில் எமக்குண்டு!* பன்முனைத் தாக்குதலும்பணிச்சுமையும்கூடினாலும்,கடமை என்றகாற்றை தேக்கிவடிவம் இழக்காதபந்துகள் நாங்கள்!* காவல் வாழ்வில்எந்த நிமிடமும்எந்த நிகழ்வும்எங்கள்கையில் இல்லை...ஆனால்,எல்லா நிகழ்வுகளிலும்எல்லா நிமிடங்களிலும்நாங்கள்இருக்கிறோம்!* உடற்சோர்வும்மனச்சோர்வும்எமக்கும் உண்டு...அப்போதெல்லாம்நீதி கிடைக்கப் பெற்றஏழைகளின்ஆனந்தக் கண்ணீரும்,நிதி கிடைக்கப் பெற்றஏமாந்தவர்களின்வாழ்த்துக் கண்ணீரும்,இனிதாய் முடிந்திட்டவிழாக்களும்,சீராக போகிறபோக்குவரத்தும்குற்றம் இல்லாமல்கழியும் இரவும் பகலும்எமக்குப் புத்துணர்வூட்டிபூரிப்புக் கொள்ள வைக்கும்!* எல்லாருக்கும் நாங்கள்...எல்லாவற்றுக்கும்நாங்கள்!* இந்தகாக்கிப் பூக்கள்பூமியைக் காக்கும்பூவேலிகள்!— மருத்துவர் ரா. சிவகுமார், காவல் துணை ஆணையாளர்,மத்திய பிரிவு,சென்னை.