கவிதைச்சோலை!
ஒரு நாள் போதுமா?அன்பு ஊற்றுக்குஇன்று அடையாள தினம்...அடுத்த தலைமுறையைஉருவாக்கி, அறப்பணியாற்றும்அன்னைக்கு ஒரு தினம்!மங்கல நாண்அணிந்த முதல் நாளாக,சுற்றங்களின் விதவிதமானவினாக்களுக்கு விடை சொல்லியேகளைத்துப் போனாலும்,கருக்கொண்ட நொடியிலேயேதுள்ளும் பெண்மைஉவகைத் தாய்மையாய் உருக்கொள்ளும்!ஐயிரண்டு திங்கள்அடிவயிற்றில் அடை காத்து,சிசுவின் செல்ல உதைகளைசுகமாய் உள்வாங்கி,தழும்புகள் பதியும் வரைபிரசவத்துயருற்றுகுருதியை உணவாய்ஈதலே தாய்மைச் சிறப்பு!ஈந்தளித்த தாய் மனதைஇருகரம் கூப்பிவணங்குதல் இயல்பே...ஆனால்,வணங்குவதற்கு ஒரு நாள் போதுமா!— ஏகலைவன், சன்னியாசிகுண்டு.