கவிதைச்சோலை!
புரியத்தான் செய்கிறது!இரவைபகலாக்க நினைத்து,பகலையும்இரவாக்கி விட்டோம்...சாளரங்களில்லாதஅறைகளோடுஅடுக்ககம் அமைத்து!பேஸ்புக்கில்ஆயிரமாயிரம்நண்பர்கள் இருந்தும்,பேசிப் பழகவில்லைஇன்னும் அடுத்த வீட்டாரிடம்!விளைவுகள் தெரிந்தும்,விளை நிலத்தைவிற்பனைக்கு எனவிளம்பரம்செய்கிறோம்...விதைநெல்லைவேக வைத்து தின்பதென்றஅறியாமையைபழமொழியாய்ச்சொல்லிக் கொண்டு!மக்கிப் போவதை மட்டுமேஉற்பத்தி செய்ய வேண்டுமென்றஉண்மை,மக்கிப் போகாதமண்ணுக்குத் தெரிந்திருந்தும்,மக்கிப் போகாத குப்பையைஉருவாக்கிக்கொண்டிருக்கிறோம்...மண்ணோடு மண்ணாய்மக்கிப் போகவிருக்கும்நாம்!நீர் நடந்து சென்றபாதையில்நீயும், நானும் இனிதாகத்துடன்நடக்க வேண்டியிருக்கும்என்பது, புரியத் தான் செய்கிறது...இருந்தும்...அரைகுறை உடைபழகிவிட்டது போல,ஆடையில்லாத மேனியையும்,நியாயப்படுத்தவழி தேடுகிறோம்...ஆதி உடை அதுவென்றகாரணம் மட்டும்போதுமா போதாதாஎன்பதாய்!— என்.ரமேஷ், சென்னை.