கவிதைச்சோலை!
எதிரியென்று யாருமில்லை!பயன்படுத்தப்படாதபுத்தகத்தின் மீதுபடியும் தூசியைஊதி ஒதுக்கலாம்!கண்ணாடி மீதுகவிழும் அழுக்கைஈரத்துணியால்துடைத்துப் போக்கலாம்!தூசுபடியாத நூலும்மாசுபடியாத கண்ணாடியும்மண்ணில் இல்லை!அதுபோல்சறுக்கலைச் சந்திக்காதமனிதர்கள்மண்ணில் இல்லை!இடறி விடவும்இடறி விழுந்தால்மகிழ்ந்து களிக்கவும்மனிதரில் ஒருபிரிவு உண்டு!பாசியும், குப்பையும்படிந்த குளம் கூடதன்மேல்கல்வீசும் சிறுவருக்காய்கலங்குவதில்லை!விழும் கற்களின்கணநேரத்தில்ஆழத்தின் அழகைஅழகாய் காட்டிஅகம் மகிழ்கிறது!குளத்தின் குணம்நமக்குள் வந்தால்வார்த்தைகளால்காயப்படுத்துபவர் மேல்வருத்தம் வராது!நம்அக அழகைஅவர்கள் சந்திக்கவாய்ப்புக் கொடுத்துவலிமை காட்டலாம்!— வளர்கவி, கோவை.