உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

அடைக்கலம் தேடி!பல நேரங்களில்அழுகையோடுவரும் என்னைஆசுவாசப் படுத்திஆறுதல் அளிக்கிறாய்!கனிவானஉன் பேச்சில்கவலைகளை மறந்துகளிப்புடன் சிரிக்கிறேன்!தாய் மடிக்கு அடுத்த படியாய்எனக்கே எனக்காய்...எனக்காகவே இருப்பதுநீ மட்டும் தான்!என்னை நானேகண்டு கொள்ளஎன் வளர்ச்சியை கண்டுவியந்து விழி விரிக்கவாய்ப்பளிக்கிறாய்!பரபரப்பான வாழ்க்கையில்பறந்து பறந்துவேலை செய்தாலும்உன்னுடன் அளவளாவும்பத்து நிமிடங்கள்உண்மையிலேயேசொர்க்கம்!முகஸ்துதிக்காகசொல்லவில்லை...பொன் பொருளைவழங்குவதில் மட்டும் தான்கர்ணன்கொடை வள்ளல்!ஆனால்...அன்பினையும் சேர்த்துவாரி வழங்கும்உன்னிடம்அந்த, 'கர்ணனே'கையேந்துவான்!எனக்கோ...தருவதற்கும்தகுதியில்லைபெறுவதற்கும்உரிமையில்லைஎன்றாலும்...உன் அன்பில்அடைக்கலம் தேடியாசிக்கிறேன்!— ஆர்.அம்புஜம், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !