உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

ஒரு பெண்ணின் கதை!* கல்லூரிப் படிப்பின் போதும்அரசுப் பணி கிடைத்துவிட்ட போதும்எனக்கு விதிக்கப்பட்டதுபஸ் பயணம் தான்!* படிகளில் நெரிசலில்ஏறி, இறங்கும் போதுவக்கிரங்களின் உராய்வுஅருவருப்பாயிருந்தது வெகுநாள் வரை...இன்றோ மரத்து விட்டது!* பயண நேரத்தில் கை உயர்த்திகம்பியை பிடித்திருப்போரின்அக்குள் வியர்வை நாற்றம்குமட்டியதெல்லாம் ஒரு காலம்...இன்று, பொருட்படுத்துவதேயில்லை!* கறுப்புப் கண்ணாடிக்குள்உச்சி முதல் பாதம் வரைகாமக்கண்கள்பதித்த கண் வடுக்கள்அநேகம்!* பெண் பார்க்கும் சாக்கில்மனதாலும், கண்களாலும்கற்பழித்துப் போனார்கள்!* இயற்கைக்குத்தான் என்மீதுஎவ்வளவு ப்ரியம்...'அந்த' நாட்களிலிருந்து எனக்குநிரந்தர விடுதலை!* சவுந்தர்யமும் கிருஷ்ணபட்சநிலவாகி விட்டால்நான் சவுக்கியமாய் வாழலாம்சொச்சகாலம்!— சாய், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !