கவிதைச்சோலை!
* முனையொடிந்த பேனா ஒன்றுகுப்பைத் தொட்டியில்கிடக்கிறது...* குப்பையில் கிடக்கும் போதும்அது தன் கம்பீரத்தையும் வண்ணத்தையும்இழந்து விடவில்லை!* அற்புத சிந்தனையாளனின்கையில் இருந்திருக்கக்கூடும்...அழியாப்புகழ் மிக்க படைப்புகளைபெற்றெடுத்த பாங்கு தெரிகிறது!* கவிஞன் விரும்பியதைவடித்தெடுத்தஅழகியல் இலக்கணங்கள்அதன்மேனியில் மிளிர்கிறது!* குனிந்து கிடந்த மானிடத்தைதுாக்கி நிறுத்தநெம்பு கோலாய்இருந்திருக்க வேண்டும்!* வரலாற்று சிறப்பு மிக்கதீர்ப்புகள் வழங்கியநீதியாளனின் கையில்இருந்திருக்கலாம்...அதனால் கூடமுனைகள் ஒடிக்கப்பட்டிருக்கலாம்!* ஓய்வு காலத்திற்கு பின்பேனாக்கள் மட்டுமல்லபேரறிவாளர்களும்குப்பையில் தான் கிடக்கின்றனர்!* முனையொடிந்துமகத்துவம் இழந்துசகதியில் கிடக்கின்றஆளுமையைக் கண்டபின்ஒரு பேனாக்காரனால் எப்படிஅழாமல் இருக்க முடியும்!— நல்லான் ராமசாமி, கரூர்.