உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

மறதி ஒரு மருந்து!* மறதிமனிதனுக்குஇயற்கை தந்த வரப்பிரசாதம்!* மூளை வயலின்முட்செடிகளைப் பிடுங்கிகளையெடுக்கும் காரியம்மறதி!* மறதிஒருவகையில் மருந்து!* மறதிமருந்துதான்...உபயோகிக்காத போதேசெயல்பட ஆரம்பித்துவிடும்சித்து விளையாட்டு!* மறதிஒரு வலி நிவாரணி...வலி நிவாரணி எங்காவதுவலி தருவதுண்டோ?* மறதிநோயல்லஉடல் வளர்ச்சியின்ஒரு பரிணாமம்!* மூளை, சிரசிலிருக்கும்பாதுகாப்புப் பெட்டகம்அதன் லாக்கர் சாவி தொலைந்துவிடும் அவலம்மறதி!* காதல் துறையில்மறதியின் சுவைகசப்பு!* மறதிக்கு நிறமுண்டுகருப்பு நிறமாகவேஅது கருதப்பட்டாலும்அதன் பிரதிபலிப்போசிவப்பு!* மூளையின் பழி வாங்கல்...உடல் வலிகளைமூளை தாங்க முடியாத போதுமறதியிடம் அதுமண்டியிடுகிறது!* இந்த காயத்திற்குஒரு காயம் ஏற்பட்டு விடும்போதுமூளைநினைவை காவு கொடுத்துதன்னைக் காத்துக் கொள்கிறது!* மறதிவயோதிகர்களின் ஆயுதம்அவர்தம் வாரிசுகளுக்கோசுமை!* மறதியையோமறந்தவர்களையோமன்னியுங்கள்ஏனெனில்,உலகம்மன்னிப்பவர்களைமறந்து விடுவதில்லை!— வாலிதாசன், ஸ்ரீவில்லிபுத்தூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !