உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

இப்போது........முல்லைக் கொடிகளைமுறித்துப் போட்டுப்போகும்பாரிகளின் கார்கள்!மாபெரும் விருந்துகளில்மயில் கறி கேட்கும்பேகன்கள்!அவ்வையைக் கண்டதும்அதிசய நெல்லிக்கனியைஒளித்து வைக்கும்அதியமான்கள்!ஆட்சியை பிடிக்கதம்பியின் தலை கேட்கும்குமணர்கள்!மணியடித்த பசுவிடம்பேரம் பேசும்மனுநீதிச் சோழர்கள்!காரியம் நடக்ககாசு கேட்கும்காரிகளும், ஓரிகளும்!சமாதான புறாக்களின்சதைகளை ருசி பார்க்கும்சிபி ராஜாக்கள்!கவச குண்டலங்களைடாஸ்மாக் கடைகளில் அடகு வைக்கும்கர்ண வீரர்கள்!இப்போது...கண்ணன் காண்டீபம் ஏந்தி நிற்க...அர்ஜுனன் கீதை சொல்கிறான்!— இளசை சுந்தரம், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !