கவிதைச்சோலை
* விவசாய நிலத்தைவீட்டு மனைக்கு வித்தாச்சு...சொந்தம் சொல்லிசுடுகாடும் பட்டாவாச்சு!* அன்றாடம் அரிசி பருப்புவிலை ஏறிப் போச்சு...அம்மாவின் தாய்ப் பாலுக்குவிலை வச்சாச்சு!* தண்ணீர் தங்கமாச்சுதவளை நீந்தும் ஏரி மாயமாச்சு...மழைக்காலம் பொய்த்துப் போனதாலேமரமெல்லாம் விறகாகிப் போச்சு!* கள்ளிச் செடியில் ஓணான் விளையாடியகாலம் மாறிப் போச்சு...ஈசல் பறக்க இடமில்லாதுஇயற்கை அழிஞ்சு போச்சு!* நெல் வயல் இரையாகிநெடுஞ்சாலையாச்சு...தெருக்கூத்து மைதானமும்ஒரு தெருவாச்சு!* காராம் பசு மேயகட்டாந் தரைதானிருக்கு...காடுமலை அழிஞ்சுகட்டடமா வளர்ந்துடுச்சு!* நீரும் நெருப்பும் தனித்தனிநம்பிய காலம் போச்சு...பூகம்ப அலை வந்துபூமி உலுக்கியாச்சு!* உள்ளங்கையில் உலகமாகவிஞ்ஞானம் வளர்ந்துடுச்சு...காத்து, ரீனா ரீட்டா சுனாமிஉருவாச்சு!* கலப்படமற்ற காற்றுவிஷமாகிப் போச்சு...ஓசோன் படலம்ஓட்டை உண்டாச்சு!* பன்றி காய்ச்சல்பாரதமே நடுங்கிடுச்சு...முக கவசம் போட்டுகிட்டுமூலையிலே முடங்கிடுச்சு!* இயற்கையை அழிச்சுசவக்குழி தேடியாச்சு...விஞ்ஞானம் விருட்சமாகிமருந்தே மனிதனை ஆளும் காலமாச்சு!* விஞ்ஞானத்தை வென்றிடவிளை நிலத்தை அழிச்சாச்சு...விரும்பியே சவக்குழிநாமே தோண்டியாச்சு!* இனியொரு விதி செய்துஇயற்கையைக் காப்போம்...இயன்றவரை இறைவன் தந்ததைஅழிவிலிருந்து மீட்போம்!— க.மோகன், அறந்தாங்கி.