கவிதைச்சோலை!
பஞ்சம்!பசி, பட்டினிவேலையின்மைவறுமை, தற்கொலையாம்!தினம் நானூறு ரூபாய்என்றாலும்சித்தாள் வேலைக்குஆட்கள் கிடைக்கவில்லை!மூன்று வேளை உணவளித்துஇருக்க இடம் கொடுக்கும்ஓட்டல் வேலைக்குஆட்கள் இல்லை!வயிற்றிற்கு உணவளிக்கும்விவசாய வேலைக்குஆட்கள் பற்றாக்குறை!சரக்குகள் ஏற்றி இறக்கும்கூலித் தொழிலுக்கும்விற்பனையாளர்களுக்கும்ஆட்கள் கிடைக்கவில்லை!படிப்பும், பயிற்சியும் வேண்டாம்ஆட்கள் தேவை என்ற போர்டுபல இடங்களில்தொங்கிக் கொண்டிக்கிறது!தொழிற்பேட்டைகளிலும்ஏற்றுமதி வளாகங்களிலும்செய்தித்தாள்களிலும்இணையங்களிலும்ஏராளமான வேலைவாய்ப்புகள்கொட்டிக் கிடக்கின்றன!பஞ்சம் இருப்பது உண்மைதான்...நேர்மை, திறமைஉண்மையாகஉழைக்கும் ஆட்களுக்கு!— ஏ.வி.கிரி, சென்னை.