உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை

விளையாட விடுங்கள்!பால் மணம்மாறா வயதில்பள்ளிக்குபடை எடுக்கிறோம்!சாட் பூட் த்ரீவிளையாடும் நேரத்தில்ஏக், தோ, தீனைநெட்டுரு செய்கிறோம்!மணல் வீடு கட்டிவிளையாட முடியவில்லை...'மவுஸ்' பிடித்துமனதை திசை திருப்புகிறோம்!ஒளிந்து பிடித்து விளையாடஆசையாய் இருக்கிறதுஉடனிருந்து விளையாடதம்பி, தங்கை இல்லைதனிமைச் சிறையில்தத்தளிக்கிறோம்!கல்லா, மண்ணாவிளையாட ஆசை தான்டவுன்லோடு செய்வதற்கேநேரம் போதவில்லையே!பாரதி சொன்னதை போல்மாலை முழுவதும் விளையாடஏங்குகிறோம்!ஆனால்,'எக்ஸ்ட்ரா கரிகுலரில்'எங்களை இழக்கிறோம்!அடுத்த வீட்டு பிள்ளைகளை கூடஅறியவில்லை நாங்கள்பூட்டிய வீட்டிற்குள்,'பத்திரமாக' இருப்பதால்!கண்ணை விற்றுசித்திரம் வாங்கச் சொல்கிறீர்சிலந்தி வலையில்மாட்டிக் கொண்டசிறு பூச்சிகளாய்சிக்கித் தவிக்கிறோம்!இரண்டரை வயது முதல்இப்படி ஒரு ஓட்டம்எங்களுக்கு தேவை தானா!உங்களைப் போலவேஉரிய வயதில்அனைத்தையும் கற்போம்அதுவரையில்எங்களைக் கொஞ்சம்விளையாட விடுங்களேன்!— எஸ்.ஆர்.சாந்தி, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !