மாற்றி யோசியுங்களேன்!
ஹாலிவுட்டின் அழகு பதுமை ஜெனீபர் லாரன்சுக்கு, 24 வயதாகிறது. தி ஹேங்கர் கேம்ஸ், மேக்கிங் ஜாய் - 2, எக்ஸ்மேன் போன்ற படங்களில் நடிக்கும் இவரைப் பற்றிய கிசுகிசுகளுக்கு ஹாலிவுட்டில் பஞ்சம் இல்லை. 'ஜெனீபர் கர்ப்பமாக உள்ளார்...' என்பது தான், தற்போது, அவரைப் பற்றிய லேட்டஸ்ட் கிசு கிசு!இதுகுறித்து, அவரிடம் கேட்டால், சிரித்தவாறு, 'இன்னும் எத்தனை முறைதான், எனக்கு கல்யாணம் முடித்து வைத்து, கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியிடுவரோ தெரியவில்லை. ஜெனீபர் என்றால் கல்யாணமும், கர்ப்பமும் தான் ஞாபகம் வருமா... கொஞ்சம் மாற்றி யோசியுங்களேன்...' என, கெஞ்சுகிறார் ஜெனீபர்.— ஜோல்னாபையன்.