உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

புயலை புரட்டுவோம்!நீரில் மிதந்தது சென்னைகண்ணீரில் தவித்தாள்நமை காத்த அன்னை!சோகங்கள் ஆயிரம்இழப்புகள் ஆயிரம்நம்புங்கள்...துணிவு கொண்டால்ஈடு செய்ய முடியாத இழப்புஎன்று எதுவுமில்லைஎதையும் ஈடு செய்யலாம்சென்னையை மீட்கலாம்!பாதிக்கப்பட்டோரை விடஉதவும் எண்ணம் கொண்டோர் அதிகம்உதவும் நெஞ்சங்கள்நமை மீட்கும்!இயற்கை கொடுத்தவலிகள் அதிகம்பாடங்களோ அதை விட அதிகம்மதங்களுக்குள்மாட்டிக் கொண்ட மனிதம்ஜாதிகளுக்குள் சிக்கிக்கொண்டசகோதரத்துவம்பணத்துக்குள் மரித்து போனசமத்துவம் மீட்கப்பட்டது!அன்னிய தேசமாயிருந்தஅண்டை வீடுநம் சொந்த வீடானதுசமூக வலைதளங்கள்சமூக எழுச்சி கொண்டனஊடகங்கள் உயிர் பெற்றன...இளைய சமுதாயம்இமயம் போல் எழுந்தன...இந்த நிகழ்வேநமக்கு கிடைத்த யானை பலம்!நீர், நிலம், காற்றுமாசுபடுவதை தடுப்பதுஅரசின் கடமை என்றுஅலட்சியம் கொண்டோம் - இனிஇது நம் கடமை என்று உணர்வோம்!நாம் போட்ட குப்பைகளேமலையாய், நாற்றமாய்...மக்காத பிளாஸ்டிக்பைகளை தவிர்த்துமஞ்சள் பைகளையே பயன்படுத்திமங்களமாய் வாழ்வோம்நீரின் பாதைக்கு வழிவிட்டுஇல்லம் அமைத்துஇனிதாய் வாழ்வோம்!இன்று இழந்தவைகள்நாம் பிறப்பில் கொண்டு வந்ததல்லஇறுதியில் வரப்போவதும் இல்லைவருத்தம் வேண்டாம்...இழந்தவைகளை மீட்கஇதை விட இன்னும் அதிகமாய்உழைக்க தன்னம்பிக்கைகொள்வோம்!எத்தனை முறை அறுந்தாலும்வலை பின்ன சலிப்பதில்லை சிலந்திஇயற்கை பேரிடரால்தொய்வு வேண்டாம் - இன்னும்உற்சாகமாய் உழைப்போம்!அணு குண்டால் அமிழ்ந்து போனஜப்பானே மீண்டு எழும் போதுநமக்கென்ன!கருணை உள்ளமும்உதவும் கரங்களும்இறைவனின் வெளிப்பாடே...பெரும் வெள்ளத்தில்நம் உயிர் காத்த இறைவன்பெரிய பலத்தை தருவான்புதிய பாதையை காட்டுவான்!எல்லா சக்திகளும் நமக்குள்ளேஎல்லா சிந்தனைகளும் நமக்குள்ளேஎல்லா செயல்களும் நமக்குள்ளேசோர்ந்தது போதும்புயலையே புரட்டிப் போடபெரும் புயலாய் எழுவோம்மீண்டு வருவோம்!— ஜெ. அரவிந்த் குமார், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !