உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

காதல் பிரதேசம்!காதல் ஒரு கனவுப் பிரதேசம்...அதில் சுற்றும்போதுவெளி உலகு தெரிவதில்லை!காதல் ஒரு பூந்தோட்டத் தீவு...அதில் நடக்கும்போதுநறுமண வாசம் தான்!காதல் ஒரு மர்மக் கூடாரம்...அதில் உலவும்போதுபயநடுக்கம் மலரும் தான்!காதல் ஒரு போர்க்களம்...அதில் புகும்போதுபோராட்ட வேதனைகள் தான்!காதல் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம்...அதில் ஆடும்போதுமறைந்து காணாமல் போவது தான்!காதல் நினைவுகள் ஒரு கல்லறை...அதில் நுழைந்து விட்டால்மீள முடியாதுதான்!காதல் ஒரு கண்ணீர்க் குளம்...அதில் விழுந்து விட்டால்மூழ்கிப் போவோம் தான்!என்றாலும் காதல் காதல் தான்காதல் போயின் சாதல் இல்லைஆதலால், நற்காதல் செய்வீர்!— கே.என்.ராமகிருஷ்ணன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !