கவிதைச்சோலை!
சித்திரை மகளே வருக!சித்திரை மகள்நித்திரை நீங்கிமுத்திரை பதிக்கதமிழ் புத்தாண்டாகதவழ்ந்து வருகிறாள்!பங்குனி திங்களுக்குவிடை கொடுத்துபொங்கும் புதுவெள்ளமாகபவழவாய் திறந்துசுடர் விடும் சூரியனின்வாழ்த்துடன் வருகிறாள்!சித்திரை மகளைஆதவன் மட்டுமாஆசையோடுஒளிக்கதிர்களோடுவரவேற்கிறான்!அன்பு உள்ளங்கள்ஆடும் மயில்கள்பாடும் குயில்கள்துள்ளி ஓடும்புள்ளி மான்கள்!விரிந்த மலர்கள்விழும் அருவிகள்வீசும் தென்றல்பேசும் கிளிகள்!இசைபாடும் மூங்கில்கள்வளைந்தோடும் நதிகள்ஓசையிடும் கடல் அலைகள்விரிந்த செவ்வானம்எல்லாம் மகிழ்வோடுவரவேற்கும் பொழுது....மனிதர்களே... மங்கள மேளம் கொட்டசித்திரை மகளைநாமும்வணங்கி வரவேற்போம்!— பூ.சுப்ரமணியன், சென்னை.