கவிதைச்சோலை!
நம்மில் ஒருவராய்...பிரம்மனின் படைப்பில்பிழையாகிப் போனவர்கள்இவர்கள்!உருவத்திற்கும்உணர்ச்சிக்கும்உருவானஉணர்வுப் போராட்டத்தில்உடை மாற்றிக் கொண்டவர்கள்இவர்கள்!கூத்தாண்டவர் கோவிலில்கூடி மகிழ்ந்தாலும்உள்ளக் குமுறலோடுகுறைவாழ்க்கை வாழ்பவர்கள்இவர்கள்!உறவுகள் உதறியபின்உலர்ந்த உள்ளத்துடன்உலகை வலம் வருபவர்கள்இவர்கள்!பரிதாபத்திற்கும்பரிகாசத்திற்கும்உரியவர்கள் அல்லஇவர்கள்!திருநங்கை எனும்திருநாமம் கொண்டஇவர்களும்மானுடப் பிறவிகளே!மதிப்போம்இவர்களின் உணர்வுகளை...ஊக்குவிப்போம்இவர்களின் திறமைகளை...வாழ வைப்போம்இவர்களைநம்மில் ஒருவராய்!— எஸ்.ஆர்.சாந்தி, மதுரை.