கவிதைச்சோலை!
முடிவில் தெரியும்!திக்கு தெரியாதுஎன் மன காட்டில்பயணிக்கிறேன்...வருவது வரட்டும் என்றால்எதிரே வருவது என்னவாக இருக்கும்என்றே அச்சம் எனக்கு...மிரட்டும் சூழல்இருளா, நிழலாபுரியாது இறுக கண்ணைமூடிக் கொள்கிறேன்...இரைச்சல் சந்தேகத்தையும்அமைதி அச்சத்தையும் தரஇதயம் படபடக்கிறேன்...நம்பிக்கையை பற்றி தான்நடக்கிறேன் - அதற்குகடவுள் என்றும் பெயரிட்டுக் கொள்ளலாம்!கணக்குமல்ல, புதிருமல்லவாழ்க்கை என்பது ஒன்றுமல்லகண்டுகொண்டேன்!முடிவில் தானே தெரியும்பாதை சரியானதா என்றுஅதற்குள் என்ன அவசரம்தீர்ப்பு கூற!— சி.கலாதம்பி, சென்னை.