உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

வாழ்க்கையை கொண்டாடுவோம்!எதிர்பாராத திருப்பம்ஏனென்று தெரியாத வருத்தம்சட்டென்று மாறும் யோசனைகள்சத்தம் போடாத ஆசைகள்!வெட்கப்படாத ஏக்கம்வேதனை கலந்த துக்கம்காரணமில்லாத கோபம்கண்ணீர் சிந்தும் தோல்வி!மறக்க விடாத நினைவுகள்மறைக்க முடியாத உறவுகள்அலைபாயும் காதல்அலைந்து தேடும் வேலை!விட முடியாத தொடர்புகள்விட்டொழியாத தொல்லைகள்கலங்க வைக்கும் அவமானங்கள்கலைய மறுக்கும் கனவுகள்!இத்தனையும் மொத்தமாகி நிற்கஇவ்வளவு தான் வாழ்க்கை எனஎதையும் தொலைத்து விட வேண்டாம்!கிடைத்த வாழ்க்கையைகுறைகள் சொல்லி உடைத்து விடாமல்கொண்டாடப் பழகுவோம்!— மனோ ரெட், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !