உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

தோல்வி என்பதுதோல்வி என்பதுவாழ்க்கையின் முடிவல்லவெற்றியின் துவக்கம்!தோல்வி என்பதுவிதியின் வலி அல்லவிதியை மாற்றும் வழி!தோல்வி என்பதுதலைகுனியும் அவமானமல்லதலை நிமிரும் அடையாளம்!தோல்வி என்பதுவெட்கப்படும் செயல் அல்லவெல்லத் தூண்டும் வீரம்!தோல்வி என்பதுமுள் குத்தும் பாதை அல்லமுன்னேறச் சொல்லும் பாடம்!தோல்வி என்பதுமிரள வைக்கும் பூதம் அல்லஅனுபவம் தரும் தேவதை!தோல்வி என்பதுதுன்பத்தின் நினைவு அல்லதூங்க விடாத கனவு!தோல்வி என்பதுகிழிந்த புத்தகம் அல்லவாழ்க்கையின் சிறந்த பக்கம்!தோல்வி என்பதுபின்னிழுக்கும் பயம் அல்லவெற்றியின் அருகேஅழைக்கும் துணிவு!தோல்வி என்பதுமுட்டாள்களின்தலைவன் அல்லஅறிவாளிகளின் ஆசிரியர்!ஒரே தோல்வியில்துவண்டு விடாமல்மேலும் மேலும்தோற்பதற்கு பழகுவோம்!— மருதாணி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !