உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

காதலும், நட்பும்!எக்கணம் நினைத்தாலும்இரு விழிகள் ஈரத்தை கசிய விடும்...ஆயிரம் உறவுகள் வந்தாலும்எட்ட முடியாத உயரத்தில் இருந்தாலும்தேசம் விட்டு தேசம் சென்றாலும்தேகத்தில் தேங்கியே இருக்கும்...தேடி வந்த சொந்தங்களும்நாடி வரும் பந்தங்களும்கோடி கோடியாய் கொட்டினாலும்பாச மழை பொழிந்தாலும்இறுதி மூச்சு உள்ளவரைஇதயத்தில் இணைந்திருக்கும்...காலங்கள் கடந்தாலும்தலைமுறைகள் தழைத்தாலும்உள்ளத்தின் உள்ளேஉறைந்து கிடக்கும்உண்மைக் காதலும், நட்பும்!— ஆர்.மீனா, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !