உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

எங்கு தேடுவது?பிஞ்சுக் குழந்தைகள்குடிக்கும் பாலிலும்கலப்படம்!எளியவர் அருந்தும்தேயிலையிலும்கலப்படம்!வாயை புண்ணாக்கும்புகையிலை தூளிலும்கலப்படம்!உயிர் காக்கும்மருந்து வகைகளிலும்கலப்படம்!ஏழை - பணக்காரர்பேதமின்றி குடிக்கும்மதுவிலும்கலப்படம்!கைக்கு கை மாறும்பண நோட்டுக்களிலும்கலப்படம்!பதவி பெறும்தேர்தல் ஓட்டுக்களிலும்கலப்படம்!விமானம் ஏறும்கடவுச் சீட்டுகளிலும்கலப்படம்!தண்ணீரில், எண்ணெயில்பழரசங்களில் எல்லாம்கலப்படம்!எங்கு, எப்படி தான் தேடுவது...நேர்மையில் கலப்படமில்லாதஅதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும்!— 'சொல்கேளான்' ஏ.வி.கிரி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !