உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

முரண்!மோசடி மன்னனுக்குவெளிநாட்டில் பாதுகாப்புசோற்றுக்கு வித்திடும்விவசாயிக்கோ உள்ளூரில் தடியடி!கம்பிகளின் வாசலில்வெள்ளை வேட்டியின்சாஷ்டாங்க நமஸ்காரம்!நாட்டை அழகாய் ஆளஆட்சியிலிருப்போருக்கு மனமில்லைஆளப்படுவோருக்கு பணமில்லை!அடுப்பெரிக்க விறகுண்டு...வயிற்றை நிரப்ப சோறுண்டா?மீத்தேன் தேவையில்லை...பட்டினி போக்கும்பசுமை வயல் போதும்!என்னை போன்றோருக்குபேனா முனையில்மட்டுமேவீரமும், வீரியமும்!தனக்கான கடமைகள்கட்டி வைத்திருக்கசமூகத்தின் சங்கடம் தீர்ப்பது எங்ஙனம்?ஆயுளின் ஒவ்வொரு நாளும்கழிந்தே வருகிறதுஎங்களின் கையாலாகாதனத்தில்!— வேணிமகள், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !