கவிதைச்சோலை!
கடமை தவறாதிரு!அன்பு செய்வதில்காற்றாய் இருந்து விடுஉன்னை யாரும்தடுக்க முடியாது!கருணை பொழிவதில்கடலாய் இருந்து விடுஉன்னை யாரும்அளக்க முடியாது!பாசம் காட்டுவதில்மழையாய் இருந்து விடுஉன்னை யாரும்மறுக்க முடியாது!உதவி செய்வதில்மலையாய் இருந்து விடுஉன்னை யாரும்மறைக்க முடியாது!பிறர் வாழ்வில்ஒளியாய் இருந்து விடுஉன்னை யாரும்பிடிக்க முடியாது!பிறரை புரிந்து கொள்வதில்கண்ணாடியாய் இருந்து விடுஉன்னை யாராலும்குற்றம் சொல்ல முடியாது!உழைப்பில் நீஉறங்காது இருந்து விடுஉன் வெற்றியை யாராலும்பறிக்க முடியாது!யார் தடுத்தாலும்கடமை தவறாதிருகல்வெட்டில் உன் பெயரைதவிர்க்க முடியாது!— செல்லம் ரகு, திருப்பூர்.