உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

மன்னித்துவிடுங்கள்! மன்னித்து விடுங்கள்...ஏனென்றால்மன்னிப்பேமகிழ்ச்சியின் திறவுகோல்!மன்னிக்கும் மனதிலிருந்துவெறுப்பு வெளியேறி விடுவதால்ஆனந்தத் தென்றலின் ஆட்சிநெஞ்சில் மலரத் துவங்கும்ஆகவே மன்னித்து விடுங்கள்!நண்பர்களின்தவறை மன்னியுங்கள்நட்பு விருட்சம்பூத்துக் குலுங்கும்!உறவினர்களின்தவறை மன்னியுங்கள்சினேகிதப் பறவைகள்சிறகை விரிக்கும்!அண்டை வீட்டாரின்தவறை மன்னியுங்கள்ஆபத்து காலத்தில்உதவிக் கரங்கள் நீளும்!பகைவனின்தவறை மன்னியுங்கள்எதிர்ப்பு மேகங்கள்விலகத் துவங்கும்!மன்னித்து விடுங்கள்...ஏனென்றால்மன்னிப்பேமகிழ்ச்சியின் திறவுகோல்!— கவிதாசன், கோவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !